பிரபல நடிகர் மரணம்!! சோகத்தில் திரையுலகம்!!

 
கைலாஷ்நாத்

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பிறந்தவர் கைலாஷ் நாத். மாணவப் பருவத்தில் மிமிக்ரி மற்றும் நாடகங்களில் அவர் காட்டிய ஆர்வமே பின்னாளைய திரைப்பட அனுபவத்துக்கு அவரை தயார் செய்தது. 1977-ம் ஆண்டு வெளியான ‘விடருன்னா மோட்டுகள்’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.

கைலாஷ்நாத்

தொடர்ந்து ‘யுகபுருஷன்’, ‘ஏதோ ஒரு ஸ்வப்னம்’ உள்ளிட்ட படங்கள் நடித்தன் மூலம் கேரளத்தில் அவருக்கு புகழ் வாங்கித் தந்தன. சின்னத்திரையிலும் தொடர்ந்து பங்களித்து வந்தார். தமிழில் 1980-ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ படத்தில் வில்லனான ரவீந்தருக்கு அல்லக்கையாக, ’தம்பு’ என்ற கல்லூரி மாணவன் வேடத்தில் கைலாஷ் நாத் நடித்திருப்பார்.அவரளவில் அந்த வேடத்துக்கு நியாயமான பங்களிப்பை செய்திருப்பார். தமிழில் அதன் பிறகும் பெரிதாக தலைகாட்டவில்லை என்றாலும், மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

rip


கைலாஷ் நாத், கல்லீரல் பாதிப்பு காரணமாக கொச்சி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை காலமானார். அவரது கல்லீரல் பாதிப்பு என்பது குடியால் நிகழ்ந்தது அல்ல; அதிகப்படி கொழுப்பு கல்லீரலில் படிவதால் ஏற்படக்கூடியது என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web