எமி விருது பெற்ற பிரபல நடிகர் காலமானார்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
டேரன் கெண்ட்

கேம் ஆப் தோரோன்ஸ் தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகர் டேரன் கெண்ட்.இவர் நீண்ட நெடுங்காலமாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் சிகிச்சை பலனின்றி  காலமானார். அவருக்கு வயது 39. கேரி டாட் அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் அவரது மறைவை உறுதி செய்துள்ளது.நீண்ட காலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆனால், இறப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.  இவர் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர்.  கெண்ட் இத்தாலியா காண்டி என்ற பிரபலமான பள்ளியில் பயின்று  2008ல்   வெளியான மிரர்ஸ்  படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். கேம் ஆப் த்ரோன்ஸ் என்ற தொலைக்காட்சி தொடருக்காக எம்மி விருது பெற்றவர். இதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.  

டேரன் கெண்ட்

கடைசியாக அவர் டன்ஜியன்ஸ் அண்ட் டிராகன் என்ற தொடரில் நடித்திருந்தார்.   2012ல்   சன்னி பாய் என்ற படத்திற்காக வான் டி என்ற விருதினை வென்றார். இவர் கடுமையான தோல் மற்றும் சரும பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.  டேரன் கெண்ட்டின் மறைவிற்கு பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள் பலர்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web