25 வயசு தான்... பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்!! தலைவர்கள் இரங்கல்!!

 
பவன்

திரைத்துறையில் சமீபகாலமாக பல நடிகர்கள் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து வருகின்றனர். சித்தார்த் சுக்லா , புனித் ராஜ்குமார் , இந்தி மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகர் பவன் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. சமீபத்தில், கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்றபோது மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணத்தால் ஒட்டுமொத்த கன்னட திரையுலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

பவன்

அந்த வகையில்  பவன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில்  உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 25. அவரது உடல் மண்டியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு   அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி சடங்குகளை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rip
பவன் மறைவுக்கு டிஏபிசிஎம்எஸ் தலைவர் பிஎல் தேவராஜு, காங்கிரஸ் தலைவர் புக்கனகெரே விஜய ராமகவுடா, ஜேடிஎஸ் தலைவர் அக்கிஹெப்பலு ரகு, யுவ ஜனதா தளம் மாநில பொதுச் செயலாளர் குருபஹள்ளி நாகேஷ் மற்றும் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  பிரபல இளம் சீரியல் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளது திரையுலகினர், பிரபலங்கள்,  ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web