”வாரிசு” பட நடிகை பாஜகவில் இணைந்தார்!!

 
jeya sudha


நடிகை ஜெயசுதா,  சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரை தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டி சில நாட்களுக்கு முன் சந்தித்துப்பேசினார். அப்போது அவர், ஜெயசுதாவை பாஜகவில் சேருமாறு அழைப்பு விடுத்தார்.இந்நிலையில், நேற்று டில்லியில் பாஜக அலுவலகத்தில் தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டி,பாஜக மாநில பொறுப்பாளர் தருண் சுக், பாஜக தேசியத்துணைத்தலைவர் டி.கே. அருணா ஆகியோர் முன்னிலையில் நடிகை ஜெயசுதா நேற்று பாஜகவில் சேர்ந்தார். 

ஜெயசுதா


இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் தெலுங்கானா  மாநிலத்தில் ஜெயசுதா செகந்திராபாத் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளராக களமிறங்குவார் என தகவல்கள் கூறுகின்றன.மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அழைப்பின் பேரில் 2009ல் காங்கிரசில் சேர்ந்து, செகந்திரா பாத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் பின்னர் தெலுங்குதேசத்தில் சேர்ந்தார். அதிலிருந்து விலகி 2019ல் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜெயசுதா
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நம்ம ஊரு செந்தில்பாலாஜி என்னடா அப்படினு கேட்காதிங்க இவங்களும் அவரைப்போலவே கட்சி  மாறிக்கொண்டே இருப்பது பதவியை பெறுவதும் சகஜமாக நடைபெறும் நிகழ்வுதான், திரைப்பிரபலம் என்பதாலும் செகந்திராபாத்தில் பிரமணர்கள் அதிகம் என்பதால் கண்டிப்பாக இவர் வெற்றி பெறுவார் என்கிறார்கள் தெலுங்கானா மக்கள் என்ன நம்ம ஊரு கெளதமி கதையாகிவிடக்கூடாது அம்புட்டுத்தான்.

 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web