பிரபல நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு.... திரையுலகில் அதிர்ச்சி!
தமிழ் திரையுலகில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இதனையடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். கடைசியாக தமிழில் சப்தம்' படத்தில் நடித்திருந்தார்.

லட்சுமி மேனனுக்கு கேரளாவின், எர்ணாகுளத்தில் மதுபானம் பார் ஒன்றில் ஐடி ஊழியர் ஒருவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நடந்த பிரச்னையில் அவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஐடி ஊழியர் அளித்த புகாரில் அவரை கடத்திய கும்பலை சேர்ந்த மிதுன், அனீஷ் மற்றும் சோனா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுடன் நடிகை லட்சுமி மேனனும் அந்த கும்பலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டனர். இந்த தகவலை அறிந்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லட்சுமி மேனன் தற்போது தமிழில் யோகி பாபு உடன் மலை' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர கவுதம் கார்த்திக் உடன் இவர் நடித்த சிப்பாய்' படம் பாதியில் நிற்கிறது. இவர் பிரபுதேவா உடன் நடித்த யங் மங் சங்' படம் வெளியாகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
