பிரபல நடிகை டாப்ஸிக்கு திருமணம்... ரசிகர்கள் வாழ்த்து!

 
டாப்சி

 தமிழ் திரையுலகில் ஆடுகளம் படத்தின் மூலம்   அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். தொடர்ந்து  10 ஆண்டுகாலமாக டேட்டிங் செய்துகொண்டு இருந்த தனது நீண்டநாள் காதலர்  மத்தியாஸ் போவை நேற்று திருமணம் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  இது குறித்து   டாப்ஸி பனுவின் நெருங்கிய உறவினர்  , "டாப்ஸியின் திருமணம் உதய்பூரில்  நெருக்கமானவர்கள், உறவினர்கள் முன்னிலையில் நடந்தது. திருமணத்திற்கு முந்தைய திருவிழா மார்ச் 20ம் தேதி தொடங்கியது. முழுக்க குடும்ப விழாவாக மட்டும் நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் திரைத்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.  


 

 "டாப்ஸியின், தோபாரா மற்றும் தப்பட் ஆகியப் படங்களில் நடித்த பவல் குலாட்டி திருமணத்தில் கலந்து கொண்டார். இவருடன் டாப்ஸியின்  நெருக்கமான நண்பரான இயக்குநர் அனுராக் காஷ்யபும் கலந்து கொண்டார்’’ என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவர்களுடன்  இயக்குநர் அனுராக்,  கனிகா தில்லான் மற்றும் அவரது கணவர் ஹிமான்ஷு சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.  இது குறித்த புகைப்படங்களை  கனிகா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.   புகைப்படங்களில், அவர் வெளியில் போஸ் கொடுக்கும் போது இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளி நிற ஆடை அணிந்திருந்தார். அவரது கணவர் நீலம் மற்றும் வெள்ளை குர்தா, பைஜாமா மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த புகைப்படங்கள் டாப்ஸியின் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டவை எனத் தெரிகிறது.

சானியா மிர்சா வாழ்க்கை வரலாற்றில் சானியாவாக டாப்சி!


டாப்ஸியின் சகோதரி ஷாகுன் பன்னு மற்றும் அவரது உறவினர் எவானியா பன்னு ஆகியோரும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.  அபிலாஷ் தப்லியால் மற்றும் பேட்மிண்டன் வீரர் சிராக் ஷெட்டி ஆகியோரும் திருமணவிழாவில் ஒரு பகுதியாக இருந்தனர். "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார், நாங்கள் எங்கிருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியாது!" என எழுதினார்.  
விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் சன்னி கௌஷல் நடிப்பில் வரவிருக்கும் த்ரில்லர் படமான ’பிர் ஆயி ஹசீன் தில்ருபா’ படத்தில் டாப்ஸி நடித்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தில்  ஜிம்மி ஷெர்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web