இதனால் தான் சீரியலில் இருந்து விலகினேன்... பிரபல நடிகை ஓபன் டாக்!
இதனால் தான் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகினேன் என்று நடிகை ரித்திகா, தான் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் ரித்திகா முதலில் நடித்து வந்தார். இந்த சீரியல் மட்டுமல்லாது, ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார்.

பின்னர், வினு என்பவரைத் திருமணம் செய்துக் கொண்டார். இவருக்குத் திருமணம் ஆன சில வாரங்களிலேயே ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய நடிகை ரித்திகா, தான் கர்ப்பமான செய்தியையும் ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகினாலும் அதன் பின்னர் ஒரு திரைப்படத்தில் நடித்தார். இது குறித்து சமீபத்தில் யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் பேசிய அவர், “திருமணம் முடிந்தாலும் நான் நடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். யாரும் நான் நடிக்கக் கூடாது என்று தடை சொல்லவில்லை. ஆனால், என் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. நிறைய பிரச்சினைகள் இருந்தது. அதனால் தான் பிரேக் எடுத்தேன். குழந்தை பிறந்ததும் நிச்சயம் நான் என்னுடைய நடிப்பைத் தொடர்வேன்” எனக் கூறியிருக்கிறார்.
