பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்... போலீசார் விசா ரணை..!!

 
பிரபல நடிகையின் மகன் மரணம்
 கவர்ச்சி நடிகை மாயாவின் மகனும் பிரபல ரவுடியுமான விக்கி  காலமானார்.

கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அத்தையான நடிகை மாயா, தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர். இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (37) வேலைக்கு செல்லாமல் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார். அதுமட்டும் இல்லாமல் பல்வேறு குற்ற வழக்குகளிலும் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

ஜெ. ஜாமீன் மனு தள்ளுபடி - கமிஷனர் அலுவலகம் முன்பு கவர்ச்சி நடிகை மாயா  தீக்குளிக்க முயற்சி | Actress Maya tries to immolate herself for Jaya -  Tamil Oneindia

கடந்த 2020-ம் ஆண்டு இவரை 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதையடுத்து 10 இடங்களில் வெட்டுபட்ட விக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விக்கி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,  விருகம்பாக்கம் போலீஸார் இவரை சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவித்தனர். விக்கி தசரதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் தனது படுக்கையறையில்  மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற விருகம்பாக்கம் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். விக்னேஷ் இறப்பில் மர்மம் நிலவுவதால், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா நடிகையின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web