30 வயசு தான் ... பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்... திரையுலகில் பெரும் சோகம்!

 
divya divya


ஹரியானா மாநிலத்தின் வளர்ந்து வரும் இளம் நடிகையும், சமூக வலைதளப் பிரபலமுமான திவ்யங்கா சிரோஹி (30), மாரடைப்பு காரணமாகத் திடீரென காலமானார். செவ்வாய்க்கிழமை இரவு காசியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஹரியானா மற்றும் வடமாநிலத் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலந்தஷாரைப் பூர்வீகமாகக் கொண்ட திவ்யங்கா, கல்வியிலும் சிறந்து விளங்கினார். மீரட்டில் பி.சி.ஏ மற்றும் சிக்கிமில் எம்.பி.ஏ பட்டப்படிப்புகளை முடித்த அவர், கலைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் நடிப்புத் துறைக்கு வந்தார். ஆரம்பத்தில் டிக்டாக் (TikTok) செயலி மூலம் வைரலான இவர், குறிப்பாகப் பஞ்சாபி பாடகி சுனந்தா ஷர்மாவின் பாடலுக்குச் செய்த வீடியோ மூலம் 5 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களைப் பெற்று இந்தியா முழுவதும் பிரபலமானார்.

மசூம் ஷர்மா போன்ற முன்னணி ஹரியானா கலைஞர்களுடன் பல இசை வீடியோக்களில் நடித்த திவ்யங்காவின் அகால மரணத்திற்குப் பல கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலை காசியாபாத்தில் நடைபெற்றன. "சிறுவயது முதலே நடிப்பும் நடனமும் தான் எனது உலகம்" எனப் பேட்டிகளில் உற்சாகமாகப் பேசி வந்த ஒரு துடிப்பான கலைஞரின் மறைவு, அவரது ரசிகர்களால் நம்ப முடியாத ஒரு இழப்பாக மாறியுள்ளது.