விடாமுயற்சி ஷீட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த பிரபல கலை இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

 
கலை இயக்குனர் மிலன் உயிரிழப்பு
கலை இயக்குனர் மிலன் உயிரிழந்துள்ள சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 ஆர்யா நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கலாப காதலன் படம் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானார் மிலன். பின்னர் ஓரம்போ படத்தில் பணியாற்றிய மிலனுக்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பல திரைப்படங்களில் கலை இயக்குனராக மிலன் பணியாற்றினார்.

அதிர்ச்சி.. விடாமுயற்சி பட கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் மரணம்..  சோகத்தில் மூழ்கிய திரையுலகம் | Vidamuyarchi Art Director Milan passes away  due to heart attack - Tamil ...

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் அஜர்பைஜானில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜித், நடிகை திரிஷா, இயக்குனர் மகிழ் திருமேனி உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜானுக்கு சென்று அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். கலை இயக்குனர் மிலனும் அவர்களுடன் அஜர்பைஜான் சென்றிருந்தார்.

Vidaamuyarchi art director milan passed away : கலை இயக்குனர் மிலன் மரணம்...  அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த சோகம்

இந்நிலையில், இன்று காலை விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக ஓட்டலில் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் கலை இயக்குனர் மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை படக்குழுவினர் மருத்துவமனை அழைத்து சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அஜித் உள்பட விடாமுயற்சி படக்குழுவினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web