#BREAKING: பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் காலமானார்!

 
nellai vasanthan


தமிழ்நாடு, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்லை வசந்தன் பிரபல ஜோதிடராக அறியப்படுகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ராசிபலன் மற்றும் வருட கணிப்புகளை கூறியுள்ளார். தமிழகத்தில் நிகழும் சம்பவங்கள், வரபோகும் நிகழ்வுகள் குறித்தும் பலமுறை நெல்லை வசந்தன் கணித்து கூறியுள்ள சம்பவங்களில் சில துல்லியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

Nellai vasanthan

இந்நிலையில், ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென காலமானார். அவரது இறப்பு, அவர் தரப்பு மக்களிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது பலரும் அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க நெல்லை விரைந்துள்ளனர்.  

அண்மையில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என நெல்லை வசந்தன் கணித்திருந்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில், கடக ராசிக்கு கண்டச்சனி காலமாக இருப்பதால்தான் கனமழை கொட்டி சென்னை, குமரி, டெல்டாவின் கடலோர மாவட்டங்களை வெள்ளம் ஏற்படும்’ என அவர் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.    

ஜோதிடம், ஆன்மீகம் மட்டுமில்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து மக்களின் மனர் கவந்த ஜோதிடராக நெல்லை வசந்தன் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.