பிரபல பரதநாட்டிய கலைஞர் காலமானார்!!

 
rathi kaarthikesu

சிங்கப்பூரின் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் ரதி கார்த்திகேசு. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக  காலமானார். இவருக்கு வயது 87. சிங்கப்பூரில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த  பரதநாட்டிய நடனக் கலைஞர்   ரதி கார்த்திகேசு. இவரது மகன்  வழக்கறிஞர் ஆனந்த் கார்த்திகேசு.  சிங்கப்பூரின் உயர்மட்ட மேல்முறையீட்டு நீதிபதிகளில் ஒருவரான மூட்டாம்பி கார்த்திகேசுவை ரதி திருமணம் செய்து கொண்டார். இதில் கார்த்திகேசு தன்னுடைய 75 வது வயதில் 1999 ல்   காலமானார்.    கணவர் உயிரிழந்த   சில வாரங்களிலேயே  மகள்  ஷர்மினி உயிரிழந்தார்.  இதனையடுத்து இவரது மகன் சுரேஷ் 2006ல் காலமானார்.    

ரதி கார்த்த்கேசு


சிங்கப்பூரில் இந்திய நடன கலைகளை நிறுவி அதனை வளர்ப்பதில்  கார்த்திகேசு  முன்னோடியாகக் கருதப்பட்டார். சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின்  தலைவராகவும் இருந்தவர்.  "சிங்கப்பூரில் உள்ள இந்திய நடன சமூகத்தில் ரதி கார்த்திகேசுவின் பங்களிப்பு மற்றும் தாக்கம் அளவிட முடியாதது" என்று ஸ்ரீராம் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.  "பெண்கள், குறிப்பாக திருமணமானவர்கள், பரதநாட்டியக் காட்சியில் தொழில்முறை கலைஞர்களாக கருதப்படாத நேரத்தில் ரதி கார்த்திகேசு நடனமாடத் தொடங்கினார். திருமணத்திற்குப் பிறகும் நடனம் ஆடலாம் என்பதை   பலருக்கு அடையாளமாக எடுத்துக்காட்டியவர்.  வாழ்க்கையில் பல தனிப்பட்ட கலைஞர்களுக்கு முன்னோடியாக இருந்தவர். இவரது மறைவிற்கு பிரபலங்கள், நடனக் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

rip
இந்திய நடன நிறுவனமான அப்சரஸ் ஆர்ட்ஸின் கலை இயக்குனர் அரவிந்த் குமாரசாமி  “ ரதி கார்த்திகேசு பல்வேறு இந்திய பாரம்பரிய கலைகள், குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன வடிவங்களை  உலகின் பல நாடுகளிலும் நிலைநாட்டியவர்.  2007ல்  தகவல், தொடர்பு மற்றும் கலை அமைச்சராக இருந்த டாக்டர் லீ பூன் யாங், பாரம்பரிய விருது வழங்கும் விழாவில் கார்த்திகேசுவின் தொண்டு முயற்சிகளை பாராட்டி பேசினார்  .  ரதி கார்த்திகேசு, சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்திற்கு நடன போஸில் அரிய இந்திய சிற்பங்களின் தொகுப்பை வழங்கியுள்ளார்.  சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா வளாகத்தில் அமைந்துள்ள  ஃப்ளவர் ஷாப் உரிமையாளர் ராஜகுமார் சந்திரா  " ரதி கார்த்திகேசு மிகவும் குறிப்பிடத்தக்க, வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்மணி, மேலும் கோவில்களுக்கு தொடர்ந்து உணவு நன்கொடைகள் செய்யும் பக்தியுள்ள பெண்மனி” எனக் கூறியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web