சோகம்... 19 வயதில் பிரபல பாடி பில்டர் மாரடைப்பால் மரணம்!
உலகம் முழுவதும் கொரோனா கால கட்டத்திற்கு பின்பான வாழ்வில் இளம் வயதினரிடையே மாரடைப்பு மரணம் பரவலாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரேசிலைச் சேர்ந்த 19 வயது பாடி பில்டர் மத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் உடற்பயிற்சியை நேசிக்கும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#MatheusPavlak #DiedSuddenly at 19yrs, in his home in Brazil on Sunday. #JonasFilho, another Brazilian body builder, died at age 29. He allegedly died from #Covid, but was #FullyVaccinated. Was Pfizer or another big pharma company to blame? https://t.co/d19aZGApDl
— Truth Sets Free (@TruthFreeForU) September 4, 2024
தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் பாடி பில்டிங் நட்சத்திரமான இருந்து வந்த மத்தேயூஸ் பாவ்லக் (19). இவர், பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் நடந்த உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ் அதிலிருந்த்து தனது பாடி பில்டிங் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று புகழை சம்பாதித்த மத்தேயூஸ் பிரேசிலின் சாண்டா காத்ரீனா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த ஞாயிறு மதியம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
மத்தேயூசின் மரணம், உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டெராய்ட்களின் பாதுகாப்புத் தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மத்தேயூசும் இவ்வளவு இளம்வயதில் அவரின் அசாதாரண உடல்வாகைப் பெற இதுபோன்ற ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.