பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
jayanth

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர்   ஜெயந்த் சவார்கர். இவருக்கு வயது 87.  இவர்  வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக உயிரிழந்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இந்தி, மராத்தி மொழிகளில் பல்வேறு  மொழி திரைப்படங்களில் நடித்தவர்.  

jayanth

மேடைக்கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய  ஜெயந்த் பின்னர் மராத்தி, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக ஹரி ஓம் விதாலா, 66 சதாசிவ், சிங்கம்  படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.  இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் ரத்த அழுத்தம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஜெயந்த் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

jayanth

அவருக்கு மருத்துவ நிபுணர்கள் குழு தீவிர  சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் ஜெயந்த் இன்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பாலிவுட்  நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள், திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web