நள்ளிரவில் பயங்கரம்... பிரபல குத்துச் சண்டை வீரர் வெட்டிக் கொலை!

 
தனுஷ்

சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணம்மாள் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தனுஷ். விஅர்  குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.  அதே நேரத்தில் காவல்துறை தேர்வுக்கும் தொடர்ந்து தயார படுத்திக் கொண்டு வந்தார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் இளைஞர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  

கொலை, கத்தி

இந்நிலையில் நேற்று ஜனவரி 29ம் தேதி  புதன்கிழமை நள்ளிரவு வீட்டின் அருகே நண்பர்களுடன் தனுஷ் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் தனுஷை வெட்டி படுகொலை செய்துள்ளது. தடுக்க வந்த அவரது நண்பர் அருணையும்  வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.  இந்த சம்பவத்தில் உடல் மற்றும் தலையில் வெட்டிப்பட்ட தனுஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து  பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் தனுஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

வெட்டுக்காயம் அடைந்த அருண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவம் குறித்து  ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு எதுவும் காரணங்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  குத்துச்சண்டை வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து  மோகன், செந்தில், டேவிட், விஷால் உட்பட  9 பேரை கைது செய்து  போலீசார், அவர்களிடம் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web