பிரபல நடன இயக்குநர் உடல்நிலை கவலைக்கிடம்!!சோகத்தில் தமிழ் திரையுலகம்!!

 
பிரபல நடன இயக்குநர் உடல்நிலை கவலைக்கிடம்!!சோகத்தில் தமிழ் திரையுலகம்!!


தமிழ் திரையுலகில் பிரபல நடன இயக்குநராக பணிபுரிந்தவர் நடன மாஸ்டர் சிவசங்கர். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றவர்.

பிரபல நடன இயக்குநர் உடல்நிலை கவலைக்கிடம்!!சோகத்தில் தமிழ் திரையுலகம்!!


தனுசின் சூப்பர் டூப்பார் ஹிட்டான திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மூலம் இவரது புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இது தவிர வரலாறு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, பரதேசி, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களில் நடிப்பிலும் பெயர் வாங்கினார்

.
இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் அவரது குடும்பம் திணறி வருகிறது

பிரபல நடன இயக்குநர் உடல்நிலை கவலைக்கிடம்!!சோகத்தில் தமிழ் திரையுலகம்!!

இதனை சினிமா பிஆர்ஓ நிகில் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிவசங்கர் மாஸ்டரின் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள். சிகிச்சைக்கு உதவுபவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அஜய் கிருஷ்ணா (சிவசங்கர் மாஸ்டரின் மகன்)
9840323415

From around the web