பிரபல கல்லூரி மாணவர் ரத்த வாந்தி எடுத்து பலி!! மாணவர்கள் போராட்டம்!!

 
மாணவன் பலி மாணவன் பலி

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், கானத்தூரில் உள்ள தனியார் கடல்சார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  பிரசாந்த்  4ம் ஆண்டு படித்து வருகிறார். இங்கு கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இவர்  ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக கல்லூரி நிர்வாகம் மாணவனை  கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது.

மாணவன் பலி

இந்நிலையில், மாணவன் பிரசாந்த் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். கல்லூரி மாணவன் திடீரென உயிரிழந்த் சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத்  தொடர்ந்து சக கல்லூரி மாணவர்கள் நியாயம் கேட்டு கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கல்லூரியின் எதிரே மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ்

இதனால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு நிலவியது.சென்னை கானத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகர் முழுவதும்  கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!