‘புஷ்பா 2’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கிறார்!

 
புஷ்பா 2
 

அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் ‘புஷ்பா 2’ படத்தில்  சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த ‘புஷ்பா’ படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. 

புஷ்பா 2

ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ‘புஷ்பா 2’ படத்தின் ரிலீஸ் டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டது. படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில், இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புஷ்பா2

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மெல்போர்னில் நடைபெற்றது. அங்கே டேவிட் வார்னர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளை சட்டை, பேன்ட் அணிந்து கொண்டு, ஹெலிகாப்டரிலிருந்து இறங்கி வரும் டேவிட் வார்னர் ஒரு கையில் லாலி பப்பும், மறு கையில் தங்க நிற துப்பாக்கியுடனும், மாஸாக என்ட்ரி கொடுத்திருப்பதாகவும், சிறப்பு தோற்றத்தில் சண்டைக் காட்சி ஒன்றில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web