பிரபல ரவுடி லல்லன் சிங் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை - ரூ.25 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தவர்!

 
ரவுடி

உத்திரப்பிரதேச மாநிலம் சகாரன்பூர் பகுதியில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையில் தனிப்படை போலிசாருக்கும், ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களுக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு மோதலில், பிரபல ரவுடி லல்லன் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். 

துப்பாக்கி

மதக் கலவரங்கள், கொலை, கொள்ளை மற்றும் ஆள் கடத்தல்  உள்ளிட்ட பல்வே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ரவுடி லல்லன் சிங், கடந்த சில ஆண்டுகளாகவே காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இந்த என்கவுண்டர் நடைபெற்றுள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

சட்டத்தின் பிடியில் இருந்து தொடர்ந்து தப்பியோடி தலைமறைவாக வாழ்ந்து வந்த லல்லன் சிங் குறித்து ஏதேனும் துப்பு கொடுத்தாலோ, பிடித்துக் கொடுத்தால், ரூ. 25 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என உ.பி. மாநில அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  இச்சம்பவம் நடந்த வான் பகுதியில் இருந்து தப்பியோடிய ரவுடி லல்லன் சிங் கூட்டாளிகளைப் பிடிப்பதற்காகப் போலீசார் ஒட்டுமொத்த மாவட்ட எல்லைகளையும் முற்றிலும் முடக்கித் தீவிரத் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.