பிரபல ஹாலிவுட் இயக்குநர் காலமானார்!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
வில்லியம் ப்ரைட்கின்

பிரபல ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின். இவரது மனைவி ஷெர்ரி. இவருக்கு வயது 88.  இயக்குநர் வில்லியம் சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஃப்ரைட்கின் உயிரிழந்ததாக   தகவல் வெளியாகியுள்ளது.

வில்லியம் ப்ரைட்கின்
இது குறித்து அவரது மனைவி ஷெர்ரி லான்சிங்   "அவருடன் வாழ்ந்த காலம் மிக  அற்புதமானது. இறக்கும்வரை  தேடப்படும் இயக்குனராக இருந்தார்.விரைவில்  அவரது ஒரு புதிய படம் வெளிவர உள்ளது. அவருடன் வாழ்ந்த காலங்களை வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்வேன். அவரது நினைவுகளில் எனது காலம் கழியும் “ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

வில்லியம் ப்ரைட்கின்

 ப்ரைட்கின் சிறந்த இயக்குநர் உட்பட 5 அகாடமி விருதுகளை வென்றுள்ளார்.  த்ரில்லர் தி ஃபிரெஞ்ச் கனெக்சன் என்ற படம் ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தது. அதே போல் 1973ல் வெளியான பேய்படமான தி எக்ஸார்சிஸ்ட்  உலகளவில் பேய் படங்களுக்கென தனி அடையாளத்தை பெற்றுத் தந்தது.  வில்லியம் ஃப்ரைட்கின் மறைவுக்கு பிரபலங்கள் ,  தலைவர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web