பிரபல பாடகர் சுட்டுக்கொலை; ரசிகர்கள் அதிர்ச்சி

 
பாடகர்

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியே ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகரும் யூடியூபருமான அங்கித் பால்யன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜிம்மில் பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அவரை மர்ம நபர்கள் குறிவைத்து தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Haryanvi singer-Youtuber Ankit Balyan shot dead

அவர் முன்னதாகப் பாடிய பாடலின் வரிகளை இந்தச் சம்பவம் அச்சு அசலாகப் பிரதிபலிப்பது ரசிகர்களிடையே மேலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற இளம் கலைஞர் ஒருவர் திடீரென இப்படிப் படுகொலை செய்யப்பட்டது இசை உலகினரையும் அவரது குடும்பத்தினரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Haryanvi singer, Youtuber Ankit Balyan shot dead outside gym in UP's Shamli | India News - Business Standard

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொலையாளிகளைத் தேடும் பணியும் காவல்துறையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் பாதுகாப்பு ஏற்படுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.