பிரபல கோவில் திருவிழாவில் விபரீதம்.. மதம் பிடித்து மோதிக்கொண்ட யானைகள்.. அலறிய மக்கள்!

 
யானைகள்

கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழாவின் போது 2 யானைகள் மதம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று இரவு ஆராட்டு பூரம் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான யானைகளை பிரிந்து செல்வது வைப்பது முக்கிய நிகழ்வாகும். இந்த நிகழ்வை காண ஏராளமான மக்கள் கூடுவர். அங்கு வரவழைக்கப்பட்ட இரண்டு யானைகளுக்கு திடீரென மதம் பிடித்தது.


இந்த நிலையில், இரண்டு யானைகளும் சண்டை போட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த யானைகளை, நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். யானைகள் விரட்டியதில் பொதுமக்கள் பலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.

பூரம் திருவிழாவின் போது யானைகளை வழிபடும் நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் யானைகள் மதம் பிடித்து சண்டை போடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web