பிரபல எழுத்தாளர் ஜனநேசன் காலமானார்!

 
ஜனநேசன்


தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் - வேலங்குடி பைபாஸ் சாலையில் வசித்து வருபவர்  68 வயது கவிஞர் ஜனநேசன். இவர்  நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது உடல் ஹைதராபாத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கோட்டையூர் - வேலங்குடி சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.  

ஜனநேசன்


அவர் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்துள்ளார். நாளை ஜனவரி 18ம் தேதி சனிக்கிழமை  அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கும் நிகழ்வு பகலில் நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
மறைந்த வீரராகவனுக்கு, பத்திரப்பதிவு துறை அதிகாரியாக பணிபுரிந்து  ஓய்வுபெற்ற அவரது மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கர்ணன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார். இளைய மகன் நிருபன் மருத்துவராக பிரிட்டனில் பணிபுரிகிறார்.  

rip
மறைந்த வீரராகவன் என்ற ஜனநேசன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சிறந்த கவிஞர், சிறுகதை கதாசிரியர், எழுத்தாளர் என பன்முக திறமை மிக்கவர். தினமணி கதிர், தினமலர் மற்றும் பிரபல பத்திரிகைகளிலும், பிரபல இணைய வழி பத்திரிகைகளிலும் பல்வேறு கதைகள் வெளியாகியுள்ளன.  அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பிரச்னைகள் குறித்து நாவல் எழுதிய சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர். மேலும் இவர் முற்போக்கு சிந்தனை வாதியாவார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்து பல்வேறு நிகழ்வுகளுக்கும், கலை இலக்கிய இரவு நிகழ்ச்சிகளையும் முன் நின்று நடத்தியவர்.
காரைக்குடி புத்தக திருவிழா தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தற்போது மூத்த உறுப்பினராக இருந்து ஆலோசனை வழங்கியவர். குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாருக்கு நன்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web