வைரல் வீடியோ... விராட் கோஹ்லியின் காலை தொட்டு கும்பிட்ட ரசிகர் !

 
ரஞ்சி கோப்பை


 
இன்று ஜனவரி 30ம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிராக  தில்லி அணி ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறது. 12 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இதற்உ முன் 2012 ம் ஆண்டு நவம்பர் மாதம் காஸியாபாத்தில் நடந்த உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.  விராட்கோலி விளையாடவிருப்பதால் நார்த் எண்ட், ஓல்ட் கிளப் ஹவுஸ் ஸ்டாண்ட் பகுதிகள் பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன.

ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த விராட் கோலியிடம் ஓடிவந்த ரசிகர் திடீரென காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்டார். டாஸ் வென்ற தில்லி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் செய்துவரும் ரயில்வேஸ் அணி 30 ஓவர் முடிவில் 94/5 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.  இந்தப் போட்டியில் கட்டுப்பாடுகளை மீறிய ரசிகர் ஒருவர் கோலியின் காலைத் தொட்டு கும்பிட்டார்.  உடனடியாக அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

விராட் கோஹ்லி

ரசிகரின் செயலினால் கோபமடையாத கோஹ்லி பொறுமையாக  இருந்தார். அவரை எழுப்பி அமைதியாகக் கூட்டிச் செல்லும்படி  சைகை காண்பிப்பார். விராட் கோஹ்லி ரசிகர்கள் அவரது  செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்திய வீரர்கள் யாரும் சரியாக சோபிக்காததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து கோஹ்லி விளையாடி வருகிறார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web