ரசிகர்கள் உற்சாகம்... மீண்டும் திரைக்கு வரும் அமரேந்திர பாகுபலி .... 'Baahubali... The Eternal War'!

 
பாகுபலி

இந்தியத் திரையுலகின் வரலாற்றையே மாற்றி அமைத்த 'பாகுபலி' ரசிகர்களை உச்சக்கட்ட அதிர்வுக்குள்ளாக்கும் சர்வதேச அப்டேட் ஒன்றை நடிகர் பிரபாஸ் பகிர்ந்துள்ளார். அமரேந்திர பாகுபலியின் அனிமேஷன் அவதாரமான (பாகுபலி: தி எடர்னல் வார்) திரைப்படத்தின் புதிய போஸ்டர் மற்றும் தயாரிப்பு விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற 'அன்னேசி சர்வதேச அனிமேஷன் திரைப்பட விழாவில்', 'வொர்க் இன் புரோகிரஸ்' பிரிவின் கீழ் 'பாகுபலி: தி எடர்னல் வார்' படத்தின் பிரத்யேகக் காட்சிகள் மற்றும் போஸ்டரை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி திரையிட்டுக் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த அனிமேஷன் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்த நடிகர் பிரபாஸ், "எங்களது பாகுபலி குழுவினர் உண்மையிலேயே மிகவும் சிறப்பான, பிரம்மாண்டமான ஒரு உலகப் படைப்பை உருவாக்கி வருகிறார்கள். இதனை ஒட்டுமொத்த உலகமும் திரையில் காண்பதைக் காண நான் மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்" என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

பாகுபலி

விஷன்ஸ்'  புகழ் இயக்குநர் இஷான் சுக்லா இயக்கி வருகிறார். ஆர்க்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் சுமார் ₹120 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் இரு பாகங்களாக இதனைத் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு மேலும் சர்வதேச அந்தஸ்து கொடுக்கும் வகையில், புகழ்பெற்ற 'எவாஞ்சலியன்' அனிமேஷன் படங்களை உருவாக்கிய ஜப்பானின் முன்னணி அனிமேஷன் நிறுவனமான 'ஸ்டுடியோ காரா' இத்திரைப்படத்தின் மிக முக்கியப் பகுதிகளை அனிமேட் செய்ய  அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் கதைக்களம் அசல் திரைப்படங்களின் தொடர்ச்சியாகவும், அதே சமயம் முற்றிலும் கற்பனை உலகைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  திரைப்படத்தில் மகிழ்மதி கோட்டையில் அமரேந்திர பாகுபலி படுகொலை செய்யப்பட்டார். ஆனால், அனிமேஷன் படத்தில் அவரது மரணம் முடிவல்ல, அது ஒரு தொடக்கம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மரணத்திற்குப் பின் அமரேந்திர பாகுபலியின் ஆன்மா பாதாள லோகம் மற்றும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே 14 மாயப் பரிமாணங்களில் நடக்கும் ஒரு பிரம்மாண்ட பிரபஞ்சப் போரில் இறங்கிப் போரிடுவது தான் இதன் முக்கியக் கதைக்களமாகும்.

இந்த அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவருமே தங்களது சொந்தக் குரல்களில் டப்பிங் பேசி வருகின்றனர். மேலும், ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.