ரசிகர்கள் அதிர்ச்சி... விபத்தில் சிக்கி பிரபல நடிகர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி!

ரசிகர்கள் அதிர்ச்சி... விபத்தில் சிக்கி பிரபல நடிகர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி!

பிரபல நடிகர் பர்வின் தபாஸ் இன்று காலை மும்பையில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது மனைவியும், நடிகையுமான ப்ரீத்தி ஜாங்கியானி உடனிருந்து கவனித்து வருகிறார்.

ரசிகர்கள் அதிர்ச்சி... விபத்தில் சிக்கி பிரபல நடிகர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி!

இன்று காலை நடைபெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், நடிகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், தற்போது ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

ரசிகர்கள் அதிர்ச்சி... விபத்தில் சிக்கி பிரபல நடிகர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதி!

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட நகைச்சுவைத் திரைப்படமான கோஸ்லா கா கோஸ்லாவில் நடித்ததற்காக நடிகர் தபாஸ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். அதன் பின்னர் ‘ராகினி எம்எம்எஸ் 2’  மற்றும் ‘மை நேம் இஸ் கான்’ ஆகிய படங்களிலும், மேலும் சமீபத்தில் மேட் இன் ஹெவன் என்ற பிரைம் வீடியோ தொடரிலும் நடித்திருந்தார். அவர் நடிகை ப்ரீத்தி ஜாங்கியானியை மணந்திருந்த நிலையில், இந்த தம்பதியர்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

From around the web