ரசிகர்கள் அதிர்ச்சி... பிக்பாஸ் நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபரேஷன்.. மருத்துவமனையில் அனுமதி!

 
சனம் ஷெட்டி சனம் ஷெட்டி

பிரபல 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் முன்னணி மாடல் மற்றும் திரைப்பட நடிகை சனம் ஷெட்டி. சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்புடன் வலம் வரும் அவர், நாள்தோறும் தனது விதவிதமான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் அன்றாட வாழ்வியல் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம், அவரது ரசிகர்களை நிலைகுலைந்து போகச் செய்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்தில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கையில், கைகளில் குளுக்கோஸ் மற்றும் மருத்துவக் குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் சனம் ஷெட்டி சோர்வாகப் படுத்துள்ளார்.

சனம் ஷெட்டி

அந்தப் பதிவின் கீழ் அவர் உருக்கமாக, "எனது உடலில் தற்போது ஏற்பட்டுள்ள ஒரு பாதிப்பு காரணமாக, மருத்துவர்களின் அவசர ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு இன்னும் சில மணி நேரங்களில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. யாரும் பயப்பட வேண்டாம், நான் நலமாக உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை சனம் ஷெட்டிக்கு என்ன மாதிரியான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது, எதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் அவரது புகைப்படத்தைக் கண்டு பதறிப்போன ரசிகர்கள், தங்களது அன்புக்குரிய சனம் ஷெட்டி எவ்விதப் பாதிப்புமின்றி இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு, விரைவில் முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.