ரசிகர்கள் அதிர்ச்சி... முதுகுத்தண்டில் முறிவு... தமிழ்பட நடிகை நுஷ்ரத் பருச்சா மருத்துவமனையில் அனுமதி!
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான நுஷ்ரத் பருச்சா, இந்தோனேசியாவின் பாலி தீவில் படப்பிடிப்பு மற்றும் விடுமுறையைக் கழித்தபோது எதிர்பாராத விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவரது முதுகுத்தண்டில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தனிப்பட்ட விடுமுறைக்காக இந்தோனேசியாவின் பாலி தீவுக்குச் சென்றிருந்த நுஷ்ரத் பருச்சா, அங்குப் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
விபத்தின் தீவிரத்தால் அவரது முதுகுத்தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் கடும் வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மேல் சிகிச்சைக்காக அவரை 'ஏர் ஆம்புலன்ஸ்' மூலம் உடனடியாக மும்பைக்கு அழைத்து வரத் தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தமிழில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து 'வாலிப ராஜா' திரைப்படத்தில் நடித்துள்ள நுஷ்ரத் பருச்சா விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
