நடிகர் அஜித்தை பார்க்க வாக்குச்சாவடியில் குவிந்த ரசிகர்கள்... ‘தல’ அஜித்தின் அதிரடி என்ட்ரி!

 
அஜித் அஜித்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், திரைப்பிரபலங்களில் முதல் ஆளாக வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிச் சென்றுள்ளார் ‘தல’ அஜித். பெல்ஜியத்தில் சர்வதேச கார் பந்தயங்களில் பிஸியாக இருந்த அஜித், தேர்தலுக்காகவே நேற்றிரவு சென்னை திரும்பினார். இன்று அதிகாலை 6:40 மணிக்கே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது குழுவினருடன் வந்த அவர், பொதுமக்கள் வரிசையில் நிற்பதற்கு முன்பாகவே முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அஜித்

அஜித் வருவதை அறிந்த ரசிகர்கள் அதிகாலை 5 மணி முதலே திருவான்மியூர் வாக்குச்சாவடியில் குவியத் தொடங்கினர். கார் ரேஸிங் முடித்து நாடு திரும்பிய அஜித்தைக் காண ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவியது. வாக்குச்சாவடிக்குத் தனது காரிலேயே வந்த அஜித், எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாகச் சென்று வாக்களித்தார். அவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது, ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு உற்சாகக் குரல் எழுப்பினர். போலீசாரின் உதவியுடன் அவர் அங்கிருந்து பத்திரமாகப் புறப்பட்டுச் சென்றார்.

அஜித்

கடந்த பல தேர்தல்களாகவே காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வந்து வரிசையில் நின்று முதல் ஆளாக வாக்களிப்பதை அஜித் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதே பாணியில் இன்றும் அதிகாலையிலேயே வந்து தனது கடமையை முடித்துள்ளார். "வேலை எவ்வளவு இருந்தாலும், ஜனநாயகக் கடமை முக்கியம்" என்பதைச் செயலில் காட்டிய அஜித்தின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்தைத் தொடர்ந்து மற்ற முன்னணி நடிகர்களும் தங்களது பகுதிகளில் காலை முதலே வாக்களிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.