நடிகை பெர்னார்ட் ராபின் மர்ம மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
பெர்னார்ட்

னரல் ஹாஸ்பிட்டல் தொடரில் கடந்த  16 ஆண்டுகளாக டெர்ரி ப்ராக் வேடத்தில் நடித்த ராபின் பெர்னார்ட் நடிகை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கலிஃபோர்னியாவின் சான் ஜாசிண்டோவில் ஒரு வணிக வளாகத்தின் பின்னால் அவரது உடல் திறந்தவெளியில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 64.
மே 26, 1959ல் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிளேட்வாட்டரில் பிறந்த பெர்னார்ட், சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஈர்க்கப்பட்டார். அவர் தனது தங்கை கிரிஸ்டலுடன் நற்செய்தி பாடல்களைப் பாடத் தொடங்கியவர் 1990 சிட்காம் "விங்ஸ்" இல் நடித்தார். ஜீன்-ஜாக் பெனிக்ஸின் ஸ்டைலான 1981 பிரஞ்சு ஹிட் "திவா"ல் பெர்னார்ட் தனது முதல் கதாபாத்திரத்திற்காக அதன் பெயரிலேயே பெர்னார்ட் ராபின் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

 

"ஜெனரல் ஹாஸ்பிடல்" தொடரில் நடித்த போது பெர்னார்ட் பெனிக்ஸ் உடன் மீண்டும் படத்தில் இணைந்தார், இது சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருது மற்றும் BAFTA ஆகியவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது.
பெர்னார்ட் அவரது சகோதரிகள் கிரிஸ்டல், ஸ்கார்லெட் மற்றும் அவரது தந்தை ஜெர்ரி வெய்ன் பெர்னார்ட் ஆகியோருடன் வாழ்ந்து வந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெர்னார்ட்

From around the web