துக்க வீட்டில் பயங்கரம்... நிலத்தகராறில் இளைஞரை வெட்டி சாய்த்த விவசாயி!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் பஞ்சாயத்து கரிசல்குளம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் அய்யாச்சாமி மகன் மதன்குமார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சோலை என்பவரின் மகன் தாவீது விவசாயியாக இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நிலப் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று கரிசகுளம் கிராமத்தில் ஒரு துக்கவீட்டிற்கு தாவீது சென்றிருந்தார். அதே வீட்டிற்கு துக்கம் விசாரிக்க மதன்குமாரும் வந்த நிலையில் அங்கு இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தாவீது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் மதன்குமாரை சரமாரியாக தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த மதன் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மதன்குமாருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுதாதேவி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆர்தர்ஜஸ்டின் சாமுவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாவீதை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
