கதறும் விவசாயிகள்... 1,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியது!

 
கனமழை நீரில் மூழ்கிய பயிர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, நேமம் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் கோனக்கடுங்கால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றில்  உடைப்பு ஏற்பட்டு, அந்த பகுதியில் 1,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. 

திருவையாறு அருகே உள்ள வரகூர் உள்ளிட்ட கிராமங்களை கடந்து அம்மன்பேட்டை பகுதியில் வெட்டாற்றில் இந்த ஆறு கலக்கிறது. அந்த பகுதி முழுவதும் உள்ள விவசாய நிலங்களுக்கு வடிகாலாகவும், பாசன வாய்க்காலாகவும் இந்த ஆறு திகழ்ந்து வருகிறது. 

பயிர்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஆற்றில் நீர் வரத்து அதிகமான நிலையில் வரகூர் அருகே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வயலுக்குள் புகுந்தது. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. 

நீரில் மூழ்கிய பயிர்

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ``கோனக்கடுங்கால் ஆற்றில் தூர்வாரும் பணிகள் முறையாக நடக்கவில்லை. ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்போதே கூறினோம். ஆனால் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை. இந்த சூழலில் பெய்த தொடர் மழையில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதிகாரிகள் இனியும் தூங்காமல் துரித கதியில் செயல்பட்டு மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் இன்னும் பல கிராமங்கள் இந்த உடைப்பால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்" என்றனர்

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!