விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு... ரூ.150 கட்டணத்தில் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிப்பது எப்படி?!

 
நெல்

 

பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அருள்வடிவு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநில அளவில் சிறு, குறு விவசாயிகளுக்கான மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் விருது போட்டி துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், சாமை ஆகிய பயிர்களுக்கு நடத்தப்படுகிறது.

Modi Govt Boosts Farm Budget 5-Fold to Rs 1.4 Lakh Cr by FY27: Rediff Moneynews

ஈரோடு மாவட்ட அளவில் நெல், நிலக்கடலை பயிர்களுக்கு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.

மேலும், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பின்பற்றி அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறன் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

PM-KISAN scheme gets 5-year extension and Rs 3.1 lakh crore - The Economic Times

போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் சாகுபடி செய்திருக்க வேண்டும். சிறுதானியங்களுக்கு ஒரு ஏக்கர் போதுமானது. குத்தகை விவசாயிகளும் பங்கேற்கலாம்.