விவசாயிகளுக்கு ரூ 41000/- கோடி உதவித்தொகை !

விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 41,000 கோடி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். 2025-26 ம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று ஜனவரி 31ம் தேதி தொடங்கியது.பாராளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த குடியரசுத்தலைவர், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நினைவு கூர்ந்தார். "நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகள் ஆனதை 2 மாதங்களுக்கு முன் கொண்டாடினோம். சில நாட்களுக்கு முன்பு, நமது 75ம் ஆண்டு சுதந்திரப் பயணத்தை நிறைவு செய்துள்ளோம். அனைத்து இந்தியர்களின் சார்பில் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்புக் குழுவில் உள்ள அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். பழங்குடி சமூகத்தின் 5 கோடி மக்களுக்காக பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2.25 கோடி சொத்துரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ. 41,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் எனது அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது" என பேசியுள்ளார். குடியரசுத்தலைவர் உரைக்குப் பின்னர், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இரு அவைகளிலும் தாக்கல் செய்ய உள்ளார். பின்னர் மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை ஜனவரி 1ம் தேதி சனிக்கிழமை தாக்கல் செய்கிறாா். அவா் தொடா்ந்து 8வது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் இதுவாகும். அதன் பின்னா் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ம் தேதி நிறைவடைகிறது. 2 ம் அமர்வு மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, ரயில்வே சட்டத் திருத்த மசோதா, பேரிடா் மேலாண்மை சட்டத் திருத்த மசோதா, எண்ணெய் வயல் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத் திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!