செப்டம்பர் 1 முதல் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!!

 
தேயிலை விவசாயி ஊட்டி கொடைக்கானல் நீலகிரி

 உழுதவன் கணக்கு பார்த்தா உழக்கு கூட மிஞ்சாது என்பது பழமொழி. கடைகளில் விற்பனைசெய்யப்படும் பொருட்களில் விவசாயிகளுக்கு சென்று சேர்வது ஒரு பகுதி கூட கிடையாது. கடைகளில் தரமான தேயிலைத்தூள் கிலோ விலை ரூ500க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கோ ஒரு கிலோ தேயிலையின் விலை ரூ14 தான் நிர்ணயிக்கப்படுகிறது. 

தேயிலை


நீலகிரி மாவட்டத்தின்   முக்கிய தொழில் தேயிலை சாகுபடி.   இங்கு  சுமார் 85000  சிறு, குறு தேயிலை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என 2011ல்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்காக அமைக்கப்பட்ட சாமிநாதன் கமிஷனும்   1 கிலோ பசுந்தேயிலைக்கு ரூ.32.50 பைசா வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

தேயிலை

இதனை சீரமைக்க இதுவரை மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு இம்மாதம் ரூ.14 என்று தேயிலை வாரியம் விலை நிர்ணயித்துள்ளது இதன் அடிப்படையில்  செப்டம்பர் 1ம் தேதி முதல் குடும்பத்தினருடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக சிறு, குறு தேயிலை விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web