இனி ஃபாஸ்ட் டேக் கட்டாயம்... ஏப்.10 முதல் புதிய பாஸ்டேக் விதிகள் அமல்!

 
ஃபாஸ்ட் டேக் ஃபாஸ்ட் டேக்

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் இந்தப் புதிய நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது.

பாஸ்ட் டேக்

ஏப்ரல் 10 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் (Cash) பெறுவது முற்றிலும் நிறுத்தப்படுகிறது. அனைத்துப் பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும். இதுவரை அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து கட்டண விலக்கு பெற்று வந்தனர். இனி அந்த நடைமுறை கிடையாது. அவர்கள் 'விலக்கு அளிக்கப்பட்ட பாஸ்டேக்' (Exempted FASTag) அட்டையைத் தனது வாகனத்தில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

அடிக்கடி பயணம் செய்பவர்களுக்காக ரூ. 3,075 விலையில் ஆண்டு சந்தா அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் ஒரு வருடத்தில் 200 முறை சுங்கச்சாவடிகளைக் கட்டணமின்றி கடக்கலாம். இது வணிகம் அல்லாத சொந்தப் பயன்பாட்டு கார்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஃபாஸ்ட் டேக்

பாஸ்டேக் இல்லையென்றால் என்ன நடக்கும்?

உங்கள் வாகனத்தில் சரியான பாஸ்டேக் அட்டை இல்லையென்றால், நீங்கள் பின்வரும் முறைகளில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்: பாஸ்டேக் இல்லாதவர்கள் UPI (GPay, PhonePe) மூலம் கட்டணம் செலுத்தலாம். ஆனால், அவர்கள் சாதாரணக் கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். பாஸ்டேக் இல்லாமல் பணமாகச் செலுத்த முற்பட்டால், வழக்கமான கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு (Double Toll) அபராதமாக வசூலிக்கப்படும்.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதும், மனிதத் தலையீடு இல்லாத வெளிப்படையான கட்டண வசூலை உறுதி செய்வதுமே இந்த மாற்றத்தின் நோக்கம் என NHAI தெரிவித்துள்ளது.