ஆகஸ்ட் 20ல் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்!!

 
நீட்

தமிழகம் முழுவதும்   ஆளுநருக்கு எதிராக  ஆகஸ்ட்20ம் தேதி  போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய  அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, திமுக தலைவரும், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும், ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடத்தப்படும். 

ஆர்ப்பாட்டம்
 அரியலூர் அனிதா தொடங்கி  குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் வரை  மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது.  இந்த மரணங்கள் அனைத்துக்கும் மத்திய அரசும்  அதிமுகவினரும், நீட் பாதுகாவலர் ஆளுநர் ரவியுமே காரணம். ஒட்டுமொத்த தமிழக மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு   ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.  

நீட்


'நீட் மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன்' என்று கூறிய ஆளுநரிடம், சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி உட்காரச் சொல்கிறார். இத்தனைக்கும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய அம்மாசியப்பன் ராமசாமியின் மகள் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றவர்.   நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பயிற்சி மையம் சென்று லட்சங்களைச் செலவு செய்து தேர்வில் வென்றவர்கள்கூட நீட்டை எதிர்க்கிறார்கள். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பியுள்ளோம்.   திமுக தலைவரும், தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன" என  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  "

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web