சென்று கொண்டிருந்த பைக் மீது சரிந்த ராட்சத இரும்புப் பலகை… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பிரமாண்ட இரும்புப் பெயர்பலகை திடீரென சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில், தம்பதியினர் உயிர் தப்பினர்.
'जब यमराज छुट्टी पर हो तो यही होता है' वीडियो फतेहपुर का है. जहां सड़क पर लगा एक भारी भरकर PWD का बोर्ड बाइक सवार दंपती के ऊपर जा गिरा. हादसे में बाइक तो क्षतिग्रस्त हो गई लेकिन दंपति को खरोंच तक नहीं आई. हादसा देखकर हर कोई सहम गया. घटना CCTV कैमरे में कैद हुई है. https://t.co/Btbk4BbD9g
— Raju Sharma journalist (@RajuSharmajour1) November 11, 2026
ஃபதேபூரின் பஹுவா சாலை சந்திப்பில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரத்தில் நிறுவப்பட்டிருந்த கனமான இரும்புப் பெயர்பலகை திடீரென வேரோடு சாய்ந்து அவர்கள் மீது விழுந்தது.
இதில் பைக் பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, இருவரும் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர். எனினும், மற்றொரு செய்தி அறிக்கையின்படி அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.சாலையோரம் நிறுவப்படும் கனமான பெயர்பலகைகளின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்பு குறித்து இந்தச் சம்பவம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
