மகளைக் கொன்று உடலைப் பிரிட்ஜில் வைத்துவிட்டு தந்தை தற்கொலை - குஜராத்தில் சோகம்!

 
கொலை வீடு

குஜராத் மாநிலத்தில் கட்டுமான மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், தனது 5 வயது மகளைக் கொன்றுவிட்டு உடலைப் பிரிட்ஜில் பதுக்கி வைத்துவிட்டுத் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரிலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷோர் தனுக் (40). கட்டுமானத் தள மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு மஞ்சுபின் என்ற மனைவியும், ஹிமன்ஷி (5) என்ற மகளும் உள்ளனர். கடந்த புதன்கிழமை மஞ்சுபின் தனது மகளைக் கணவரிடம் விட்டுவிட்டுத் தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது கிஷோர் போனை எடுக்காததால், மறுநாள் காலை தனது சகோதரனை வீட்டைப் போய் பார்க்கும்படி கூறியுள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

மஞ்சுபினின் சகோதரர் சென்று பார்த்தபோது, கிஷோர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். மேலும், அவரது மகள் ஹிமன்ஷி வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் (பிரிட்ஜ்) இறந்து கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கிஷோர் எழுதி வைத்திருந்த 3 கடிதங்களைக் கைப்பற்றினர். அந்தக் கடிதங்களில், தனக்கு அதிக அளவில் கடன் இருப்பதாகவும், தொழில் ரீதியான கூட்டாளிகள் பணம் தராததால் தற்கொலை செய்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் இறந்தால் தனது மகள் கஷ்டப்படுவாள் என்பதால் அவரைக் கொன்று உடலைப் பிரிட்ஜில் வைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

மகளைக் கொல்வதற்கு முன்பு அவருக்குப் புதுத் துணிகளை உடுத்தி, பிறந்தநாள் கொண்டாடுவது போன்று அறையில் பலூன்களைக் கட்டிக் குதூகலப்படுத்தியது போன்ற அலங்காரங்களை கிஷோர் செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.