மகளைக் காதலிக்க வற்புறுத்தியவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்த தந்தை படுகொலை - 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!

 
கொலை

திருத்தணி பகுதியில் தனது மகளைத் தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தையை, அதே கும்பல் ஆத்திரத்தில் அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி பகுதியில் வாலிபர்கள் சிலர் ஒரு சிறுமியைத் தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார்.

போலீசார் ரோந்து போலீஸ் காவலர் கொலை கொள்ளை

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற ஆத்திரத்திலும் பழிவாங்கும் நோக்கத்துடனும், அந்தத் தந்தையைச் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் வழிமறித்துத் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்த காவல்துறையினர், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 சிறார்கள் உள்பட மொத்தம் 5 பேரையும் அதிரடியாகச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.