பொதுத்தேர்வுக்கு முன்பே சோகம்... மதிப்பெண் குறைந்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை!

 
 கொங்கராயக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி

பொதுத்தேர்வுக்கு முன்பாகவே பள்ளி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரையை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் பொன்ராணி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் விவசாய தொழில் செய்து வருகிறார். ஆறுமுகத்தின் மூத்த மகள் அன்பு சந்தியா (15) கொங்கராயக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்தப் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்தார்.

இம்மாதம் 26ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க உள்ள நிலையில், கடந்த மாதம் நடந்த பருவத்தேர்வில் அன்பு சந்தியா மதிப்பெண் குறைந்துள்ளதாக சந்தியாவின் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். பொதுத்தேர்வு வரப்போகிறது என்றும், நீ நன்றாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கூறுவதாகவும் சந்தியாவின் தந்தை ஆறுமுகம் சந்தியாவை திட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அன்பு சந்தியா என்ற மாணவி மதிய இடைவேளையின் போது பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கீழே விழுந்து பலத்த காயமடைந்த சந்தியாவை அருகில் இருந்த ஆசிரியர்கள் கருங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மாணவி அன்பு சந்தியா மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web