டிராக்டர் மீது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து தந்தையும் மகனும் பலி - திருவாரூரில் சோகம்!

 
மின் கம்பி பலி

திருவாரூர் அருகே உள்ள புதூர் கிராமத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது டிராக்டர் மீது உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்த விபத்தில், மகனை மீட்கச் சென்ற தந்தையும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தில் விவசாயப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் டிராக்டரில் இருந்த ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

தன் கண்முன்னே மகன் ஆபத்தில் சிக்கியதைக் கண்டு பதறிப்போய் அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது தந்தையும் மின்சாரம் தாக்கித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையும் மகனும் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.