கொடூரம்... 3 வயது பெண் குழந்தையைக் கொன்ற தாயின் 2வது கணவர் !

 
சிவகாசி

சிவகாசி அருகே மதுபோதையில் இருந்த தாயின் இரண்டாவது கணவர் விக்னேஷ்வரன் 3 வயது பெண் குழந்தையைக் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். குழந்தையின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து இந்தத் தாக்குதலை  அரங்கேற்றியுள்ளார். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்

தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். குழந்தையைக் கொலை செய்த தாயின் இரண்டாவது கணவர் விக்னேஷ்வரனைக் காவல்துறையினர் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இத்தகைய வன்கொடுமைச் சம்பவங்கள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மக்களிடையே எழுப்பியுள்ளன.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

குழந்தைகள் மீது நடத்தப்படும் இது போன்ற கொடூரத் தாக்குதல்களுக்கு எதிராகச் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர் விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.