"பில்லி சூனியம்” - மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு மாமனார் தற்கொலை முயற்சி!

 
பில்லி சூனியம் மருமகள் கொலை

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் மருமகளை மாமனாரே கோடாரியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரைச் சேர்ந்த லட்சுமி பாலி (42) என்ற பெண்ணுக்கும் அவரது மாமனார் நாதுலால் பாலி (72) என்பவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மருமகள் தனக்குப் பில்லி சூனியம் வைப்பதாக நாதுலால் சந்தேகப்பட்டுள்ளார்.

சூனியம்

இந்தச் சந்தேகம் காரணமாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது திடீரென ஆத்திரமடைந்த மாமனார் நாதுலால், கையில் வைத்திருந்த கோடாரியால் மருமகள் லட்சுமி வாலியின் தலையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். கொலைச் செய்ததைத் தொடர்ந்து நாதுலால் அருகில் இருந்த கிணற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கிணற்றில் குதித்த நாதுலாலை மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.