"அன்பு, தியாகத்தின் அரண் தந்தையர்கள்!" - தந்தையர் தினத்தில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 
முதல்வர் ஸ்டாலின்

உலகத் தந்தையர் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தின் அசைக்க முடியாத அரணாக விளங்கும் அனைத்துத் தந்தையர்களின் பங்களிப்பையும் போற்றித் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அடித்தளமாகவும், குடும்ப அமைப்பின் உன்னத தூணாகவும் விளங்குபவர்கள் தந்தையர்கள் மட்டுமே. அன்பு, பொறுப்புணர்வு மற்றும் அளப்பரிய தியாகம் ஆகிய உயரிய பண்புகளோடு, தங்களது குடும்பத்தையும் குழந்தைகளையும் எவ்வித இன்னல்களும் தாக்காதவாறு ஒரு பாதுகாப்பு அரணாக நின்று காப்பவர்கள் அவர்கள்.

தங்கள் பிள்ளைகளின் நல்வாழ்விற்காகவும், அவர்களின் எதிர்காலக் கனவுகள் நனவாவதற்காக்கவும் தங்களது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கும் ஒவ்வொரு தந்தையின் உழைப்பும், சத்தமில்லாத தியாகங்களும் போற்றத்தக்கவை.

சமூக உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திமுக தலைவரின் இந்தத் தந்தையர் தின வாழ்த்துப் பதிவு தற்பொழுது அக்கட்சியின் தொண்டர்களாலும், பொதுமக்களாலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.