உஷார்... வெள்ள அபாய எச்சரிக்கை... பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு!
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரியின் மொத்த உயரம் 36 அடியாகும். தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பூண்டி ஏரிக்கான நீர்வரத்து காலை 6 மணி நிலவரப்படி 1,290 கன அடியாக உள்ளது.
நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 35 அடியை தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே நீர்த்தேக்கத்தில் இருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம் கிருஷ்ணபுரம் ஆட்ரப்பாக்கம் ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமந்தோப்பு, கொரக்க தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்பூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம் புதுகுப்பம் கனிப்பாளையம், வன்னிப்பாக்கம், இடையன்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணுர் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
