2,00,000 பக்தர்களுக்கு அன்னதானம்... இலவச பேருந்து, 3 நாட்கள் கட்டணமில்லா தரிசனம்... பழனியில் தைப்பூசத்திற்கு குவியும் பக்தர்கள்!

 
பழனி

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக இப்போதில் இருந்தே கிளம்பி சாரை சாரையாக புறப்பட்டுள்ளனர். வழிநெடுகிலும் அன்னதானம் என்று திருவிழா திண்டுக்கல் மாவட்டத்தில் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் முக்கிய தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உலகப் பிரசித்தி பெற்றது.  வரும் பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச திருவிழா அனைத்து முருகர், சிவன் கோயில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி 3 நாட்களுக்கு கட்டணமில்லா தரிசனம் செய்யலாம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

பழனி

தைப்பூச திருநாளில் முருகன் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக 3 நாட்கள் கட்டணமில்லா தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சேகர்பாபு
பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 10, 11, 12 என தொடர்ந்து 3 நாட்கள் பழனி கோயிலில் பக்தர்கள் எந்தவிதமான கட்டணமும் இன்றி தரிசனம் செய்யலாம். திருவிழாவுக்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக இந்த நாட்களில் நகரில் கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web