உதவித் தொகை வழங்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி !! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
கஸ்தூரி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வருபவர்   சுப்பிரமணி .இவருக்கு வயது 36. இவருக்கு   2 பெண் குழந்தைகள் .  இவர் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முதல்வரின்  இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இதற்காக தொடர்ந்து ஒரு வாரமாக  காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நடையாக நடந்துள்ளார்.

அங்கு  பணிபுரிந்து வரும் கஸ்தூரி  அனுமதி வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ2000  லஞ்சம் வழங்க வேண்டும்  எனக் கேட்டுள்ளார். ஆனால் சுப்பிரமணி தன் கையில் இப்போது ரூ1800  மட்டுமே இருப்பதால் அதை மட்டும் தருவதாக  தெரிவித்துள்ளார். ரூ2000ல்   ஒரு பைசா குறைந்தாலும் அனுமதி வழங்க முடியாது என கஸ்தூரி பிடிவாதம் பிடித்துள்ளார். இதனால் வேதனை அடைந்த சுப்பிரமணி, இதுகுறித்து   லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்  சுப்பிரமணியிடம் கொடுத்து அனுப்பினர். அதை பெற்றுக்கொண்டு காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த சுப்பிரமணி, அங்கிருந்த கஸ்தூரியிடம் பணத்தைக் கொடுத்தார். ரகசியமாக மறைந்திருந்த அதை கண்காணித்துக் கொண்டிருந்த  லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கஸ்தூரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து  அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web