போலீஸ்காரர் வீட்டு முன்பு பெண்போலீஸ் தர்ணா!!

 
மதுமிதா

திருவாரூர் மாவட்டம் தண்டலை பகுதியில் வசித்து வருபவர்   கோவிந்தராஜன். இவரது மகன் அஜித். இவருக்கு வயது 28. இவர், சென்னை பெருநகர போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக   பணி புரிந்து வருகிறார். தண்டலையில் உள்ள இவரது வீட்டு முன்பு திருவாரூர் அருகே உள்ள கேக்கரை பகுதியில் வசித்து வரும் 29 வயது  மதுமிதா  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  போலீஸ்காரர் அஜித் பதிவு திருமணம் செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்ணா


இது குறித்து   மதுமிதா கூறியதாவது,”   அஜித்தும் நானும் ஒன்றாக பணியாற்றி வந்தோம். இருவருக்குள்ளும்  காதல் ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் தங்கி வேலை பார்த்தோம்.  தற்போது  அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுவதாக அறிந்தேன். அவரிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன் இதன் பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்த அஜித் சில நாட்களிலேயே தலைமறைவானார்.  நான் மீண்டும் புகார் அளித்தேன். எனது புகார் தொடர்பாக மனு ரசீது வழங்கப்பட்ட நிலையில்   மார்ச் மாதம் 10-ந் தேதி மண்ணடி மாரியம்மன் கோவிலில் நாங்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணத்தை பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்து கொண்டோம்.  திருமணம் முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்ற அஜித் திரும்பி வரவில்லை. இதனால் அஜித் வீட்டு முன்பு நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டேன் எனக்  கூறியுள்ளார்.  

மதுமிதா
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் “ இது குறித்து  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்   கூறி மதுமிதாவை அழைத்து சென்று அவருடைய உறவினர் வீட்டில் விட்டனர். பதிவு திருமணம் செய்துவிட்டு தன்னை ஏமாற்றியதாக போலீஸ்காரர் வீட்டு முன்பு பெண் போலீஸ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web