வீட்டை விட்டு வெளியே வராதீங்க... வேகமெடுக்கும் ஃபெங்கால் புயல்!

 
ஃபெங்கால் புயல்


 
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் சென்னையில் இருந்து, 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. ஃபெங்கல் புயல் இன்று மாலை புதுச்சேரிக்கு அருகே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஃபெங்கால் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை உட்பட 9 மாவட்டங்களில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தமிழக மக்களே உஷார்!! மீண்டும் ஒரு புயல் சின்னம்!!


ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயல் இன்று காலை வரை 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதன் வேகம் சற்று அதிகரித்து, 12 கி.மீ/ மணி என்ற வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்நிலையில், மீண்டும் புயலின் வேகம் 13 கி.மீ/ மணி என அதிகரித்து உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெமல் புயல்


இந்தப் புயல் தற்போது, சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதன்  வேகம் சற்றே அதிகரித்து 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. எனினும்  இன்று பிற்பகலில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியான வானிலை தகவலின்படி இன்று மாலை தான் கரையை கடக்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web